
வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வீடு திரும்பிய, காலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும, இவர்களுக்கு கொரோனா ஏற்படவில்லையென்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்திம சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
வெலிசர முகாமிலுள்ள கடற்படை வீரர்கள் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளதையடுத்து, இவர்;களுக்கு பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.