யாழ் தாவடி தெற்கில் அரிசி ஆலைக் கழிவு நீரால் அல்லல்படும் மக்கள்!

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாவடி தெற்கு ஜே – 192 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் தாம் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தாவடி காளிகாம்பாள் விளையாட்டு மைதானத்தில் தேங்கிக்கிடக்கும் நீரிலும் குறித்த கழிவு நீர் கலந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

அத்தோடு குறித்த அரிசி ஆலையை சூழவுள்ள சில வீடுகளுக்குள்ளும் கழிவு நீர் உட்புகுந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.