
ஹட்டன் – டிக்கோயா காசல்ரீ பகுதியில் உள்ள மதுபானசாலையை இனந்தெரியாத நபர் ஒருவர் உடைத்து கொள்ளையிட முயற்சி செய்துள்ளார்.
இதன் போது மக்கள் கூச்சலிட்டமையினால் குறித்த சந்தேகநபர் தப்பி ஓடியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நள்ளிரவு 12மணி அளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் மதுபானசாலையினை உடைத்து உள்ளே சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கெமராவை மறு புறமாக திருப்பி வைக்கும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியிருக்கின்றது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற சீ.சீ.டிவி கணொளிகளை வைத்து தப்பி ஓடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.