
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமானாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் இவருடைய மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், இது தொடர்பான மேலதிக தகலவ்கள் விரைவில் வெளியிடப்படும்.
