புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தப்பியோடியவருக்கு வலைவீச்சு!

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு விமானப்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தப்பியோடிய ஒருவரை தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினர் தேடி வருகிறார்கள். ஏனைய இருவரும் சிக்கினர்.

நேற்று முன்தினம் (23) இரவு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து மூவர் தப்பியோடியிருந்தனர்.

கொழும்பு நகரம், நீர்கொழும்பு பகுதிகளில் அநாதரவாக சுற்றித்திரிந்தவர்கள் இந்த மையத்தில் உள்ளனர். அத்துடன், ஜாஎல போதைவஸ்து பாவனையாளர்களில் சிலர் கொரோனாவினால் சிக்கியதையடுத்து, அவர்களின் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதில் மூவரே தப்பியோடினர்.

எனினும், இவர்களில் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். காட்டிற்குள் மறைந்திருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மற்றைய இளைஞரை தேடி பொலிசார், இராணுவம், விமானப்படை இணைந்து சல்லடையிட்டு தேடி வருகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com