
இலங்கையின் பிரதான கடற்படை முகாம்களில் ஒன்றான வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் மேலும் 35 சிப்பாய்களுக்குக்
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த முகாமில் பணியாற்றும் 4 ஆயிரம் கடற்படைச் சிப்பாய்க ளும் அவர்களின் குடும்பத் தினரும் கட்டாயத் தனிமைப் படுத் தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெலிசறை கடற் படை முகாமுக்குள் இருக்கும் 150 விடுதிகளில் உள்ளோரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை 417ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி மொத்தமாக 65 கடற்படை யினர் கொரோனா தொற்றுக்கு இலக்கா கியுள்ளனர். வெலிசறை கடற்படை முகாமில் பணி யாற்றிய கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியதையடுத்து நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரசோதனை மூலம் மேலும் 29 கடற்படையினருக்கு வைரஸ் பரவி யமை கண்டறியப்பட்டது.
இந்நிலையிலேயே நேற்று மேலும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள் ளமை கண்டறியப்பட்டது. வெலிசறை கடற்படை முகாம் முடக்கப் பட்டுள்ள நிலையில், அங்கு தொடர் பரி சோதனைகள் இடம்பெறுவதுடன், முகாமில் இருந்து விடுமுறையில் சென்றவர்களை அழைத்து வருவதற்கான விசேட வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விசேட வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.