கொழும்பில் குறைந்து கண்டியில் அதிகரிக்கும் கொரோனா!

நேற்று பதிவான 503 கொரோனா தொற்றாளர்களில் 147 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

தற்போது கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 க்கும் குறைவாக உள்ளது.

அதன்படி ,கம்பஹா மாவட்டத்தில் 130 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 28 பேரும் நேற்று இனங்காணப்பட்டனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர கண்டியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆக இருந்தது.

மேலும் ,மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உட்பட 36 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.