
இலங்கையில் கொரோனா பரவ ஆரம்பித்ததும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அத்துடன் விமான நிலையங்களையும் மூட அரசு தீர்மானித்தது.
வெளிநாடுகளில் கல்வி கற்கும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா விசாக்களில் தங்கியுள்ள பல இலங்கை மாணவர்கள் நாடு திரும்புவதற்கான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
வெளிநாடுகளில் தாய்நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களை அழைத்து வரும் முதற்கட்டமாக அண்மையில் இலங்கை விமான சேவையைச் சேர்ந்த UL 1206, UL 1145 மற்றும் UL 1124 ஆகிய விமானங்கள் பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சென்று இம்மாதம் 22,23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தடைந்தன.
விமான நிலைய அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரால் நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
