
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்ட தரவாளை தேயிலை மலையில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிறுத்தை ஒன்று சிக்குண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் இன்று (24) வெள்ளிகிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
டிக்கோயா தரவாளை தோட்டப் பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற ஹட்டன் பொலிஸார், நல்லதண்ணி ஜுவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் குறித்த சிறுத்தையை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
ரந்தெனிகலை மிருக வைத்தியசாலையிலிருந்து வைத்தியர் ஒருவரை வரவழைத்து குறித்த சிறுத்தைக்கு மயக்க ஊசி ஏற்றி சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்தச் சிறுத்தை 4 அடி நீளமும் இரண்டரை அடி உயரமும் கொண்ட ஆண் சிறுத்தை என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.