கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,967 பேர் பாதிப்பு; 95 பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, 95 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 59ஆயிரத்து 064பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மொத்தமாக 11 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 60 ஆயிரத்து 666பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 450 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 86 ஆயிரத்து 504பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.