காதலனின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் நாலாவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணிப்பெண்!

பிரேசில் நாட்டில் காதலனின் துன்புறுத்தல் தாங்க முடியாமல், இளம் வயது கர்ப்பிணி ஒருவர் நாலாவது மாடியில் சுமார் 33 அடி உயரத்தில் இருந்து வெளியே குதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நாள் எப்படி இருந்தது என விசாரிக்க மறந்ததாக கூறி அந்த இளைஞர் 22 வயதேயான தமது கர்ப்பிணி காதலியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

22 வயதான மெர்சஸ் இந்த ஆண்டு ஜூன் மாதம் பேஸ்புக் பக்கத்தினூடே ஜொனாதன் வில்லியன் கொரியாவுடன் பழகியுள்ளார்.

ஆனால் அவர்களது உறவு விரைவில் எதிரும் புதிருமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி கொரியா தொடர்ந்து மெர்செஸைத் தாக்கி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது,

இந்த நிலையிலேயே, கொரியாவிடம் அன்றைய நாள் எவ்வாறு அமைந்தது என்பதை விசாரிக்க தவறியதாக கூறி மெர்சஸை தாக்கியுள்ளார்.

சுமர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாக்கப்பட்ட நிலையில், உயிருக்கு பயந்த அந்த இளம் தாய் படுக்கையறை ஜன்னலிலிருந்து வெளியே குதித்துள்ளார்.

இந்த நிலையில் எலும்பு முறிவுகளுடன் மீட்கப்பட்ட அவர், உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள கொரியா, தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் குடும்ப வன்முறை, பெண்கள் மீது வன்முறை உள்ளிட்ட பிரிவுகளில் அவர் தண்டிக்கப்படுவார் என கர்ப்பிணி தரப்பு சட்டத்தரணிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.