யாழிலும் நிவர் புயல் தாக்கம்!

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த நிவர் புயல் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பாதிப்புகள் பதிவாகியிருந்தன.

அதன்படி குறித்த மாகாணங்களின் கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்பட்டிருந்ததுடன், பலத்த காற்றுடனான காலநிலையும் நிலவியிருந்தது.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன், கடும் மழை காற்றின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஷ் தெரிவித்திருந்தார்.

அத்தோடு 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்ததுடன், யாழில் சில பகுதிகளில் கடும் காற்று காரணமாக மரங்களும் முறிந்திருந்தமை விழுந்தமை குறிப்பிடத்தக்கது.