வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி!

செட்டிகுளம், காந்திநகர் பகுதியில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறிந்த நபர், பன்றிகளிடம் இருந்து தன் தோட்டப் பயிர்களைப் பாதுகாப்பதற்காக, பாதுகாப்பற்ற முறையில் மின்சார வேலிகளை அமைத்திருக்கின்றார்.

இந்த மின்சார வேலியில் இன்று பிற்பகல் தவறுதலாக இம்மின்சார வேலியில் அகப்பட்டு இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.