எல்பிஎல் முதல் போட்டியில் நொருக்கிய குசல்; கொழும்புக்கு இலக்கு 220

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் முதலாவது போட்டியில் இன்று (26) கண்டி டஸ்கர்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

போட்டியில் முதலில் ஆடிய கண்டி அணி 3 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அணி சார்பில் அதிகபட்சம் குசல் பெரேரா 52 பந்தில் 87, ரஹமனுல்லா குர்பஷ் 22 பந்தில் 53 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் கைய்ஸ் அஹமட் 28 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் வீழ்த்தினார்.