கல்முனையில் மூன்று பிரிவுகளில் ஊரடங்கு முடக்கம் அமுல்!

அம்பாறறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இன்று (26) மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று வேகமக பரவுவதால் எதுவித பாகுபாடுமின்றி சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்க்குமாறும் அவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.