30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா! – எண்ணிக்கை 409

இலங்கையில் இன்று (24) வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த மேலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (23) அதே முகாமை சேர்ந்த 30 கட்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே இன்றும் 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி இதுவரை கடற்படை வீரர்கள் 60 பேர் உட்பட மொத்தம் 409 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com