மது போதையில் தம்பியின் கையை வெட்டிய அண்ணன்!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் தம்பியின் கையை வெட்டிய அண்ணனை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் நேற்று செவ்வாய்கிழமை குறித்த சந்தேகநபரை முன்னிலைப்படுத்தியபோது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிண்ணியா-மாஞ்சோலைசேனை பகுதியில் 12 வயதான தனது தம்பியை மதுபோதையில் கத்தியால் வெட்டியதாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சிறுவனின் அண்ணனை கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைபடுத்தியிருந்தனர்.