உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் மாரடைப்பாலேயே மரணம்!

யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் தயாகரன் (வயது-48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.