கஜன் எம்பிக்கு எதிராக தடை கோரி வழக்கு!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வராசா கஜேந்திரன் எம்.பிக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (24) காலை ஒன்பது மணிக்கு ஆஜராகுமாறு நீதிமன்றப் பதிவாளரால் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் தங்களுக்கு எதிராக தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக, கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி இலக்க வழக்குத் தொடர்பாக இவ்வாறு கட்டளை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.