பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்!

தங்கியிருந்து கல்வி பயின்றுவந்த விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட 3ம் வருட மாணவனது சாவில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்து அவரது சகோதரன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன, பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோருக்கு பெயரிட்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டது.

அக் கடிதத்தில்,

இம்மரணத்தில் மிகுந்த சந்தேகம் இருப்பதனாலும் பொலிஸார் இம்மரணத்தினை தற்கொலை எனும் ரீதியில் விசாரணை மேற்கொண்டுள்ளமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயத்தினை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்தி உரிய விசாரணைகளை மேற்கொண்டு எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் – என்றுள்ளது.