10 லீற்றர் கசிப்பு கைப்பற்றல்!

கிளிநொச்சி – முட்கொம்பன் பகுதியில் நேற்று (22) மாதர் சங்கம், மகளிர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் விற்பனைக்கு தயாராகவிருந்த 10 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் சேதமாக்கப்பட்டதுடன், கசிப்பை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் முட்கொம்பன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.