கொரோனாவால் சிறைக் கைதி மரணம்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக 88வது மரணம் பதிவாகியுள்ளது என்று இன்று (23) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

82 வயதுடைய மஹரை சிறை கைதி ஒருவரே இவ்வாறு ராகமை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 88 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட மூவர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.