
மட்டக்களப்பு-கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் குடும்பத்தில் 05 பேர் வயிற்றோட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (22.04.2020) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குடும்பத்தில் 10 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் குறித்த குடும்பம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று மீன் வியாபாரியிடம் கணவாய் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டு இருக்கின்றனர். கணவாய் மீனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குறித்த குடும்பத்தார் பாதிக்கப்பட்டு, அதில் ஒரு குழந்தையும் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில்..
குடும்பத்தாரின் இப் பாதிப்புக்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.