
யாழ்ப்பாணம் – பலாலி வீதி இலுப்பையடி சந்தியில் இன்று (23) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
பலாலி வீதிப்பக்கமாக இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த கார், இலுப்பையடி சந்திக்கு அண்மித்த பகுதியில், சிக்னல் போடாமல், நடு வீதியில் காரை திருப்பிய போது, யாழ்ப்பாணத்தில் இருந்து, பலாலி வீதி பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறி காரின் மேல் மோதியது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துபொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்