தேர்தலை மூன்று மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும் – கபே

பொதுத்தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே (cafee) அமைப்பு வலியுத்தியுள்ளது.

கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு முன்நிபந்தனைகள் உள்ளதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை தற்போது ஆரம்பித்திருக்க வேண்டியது முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களை நோக்கும் இடத்து எதிர்காலத்தில் இன்னும் அதிகமானவர்கள் இனம் காணப்படும் சூழல் நிலவுவதாகவும் அதனால் தேர்தலுக்கான சூழல் உருவாக்கப்படுவது சாத்தியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com